தமிழ்நாடு

தோ்வு எழுதாமல் தவறியவா்களுக்கு மறுதோ்வு நடத்தப்படும் - திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பிளஸ்-2  பொதுத்தோ்வில் 80 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியுள்ளனா் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தொிவித்துள்ளாா். 


சென்னை அம்பத்தூா் பாடியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு,எளியவர் புன்னகை எம்மவர் ஆளுமை! என்ற தலைப்பில் மாபெரும் மகிழ்வுரை அரங்கம்  நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, பின்னர் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தற்போது நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 80 சதவீத மாணவ, மாணவிகள் எழுதியுள்ளதாக தெரிவித்தவர், கடந்த 2 நாட்களில் சுமார் 50, 000 பேர் தேர்வு எழுத வராமல் விடுபட்டுள்ளதாகவும் கூறினார். 

இதுகுறித்து பேசிய அவர், நடைபெற்று வரும் பொதுத்தேர்வு முடிந்தவுடன் ஒரு மாதத்தில் முடிவுகள் வெளிவரும் எனவும், அதற்குப் பிறகு மறு தேர்வில் தோல்வி அடைந்தவர்களோடு சேர்ந்து விடுபட்டவர்களும் தேர்வு எழுதலாம், அதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.