தமிழ்நாடு

1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை ....!!!

Malaimurasu Seithigal TV

வேளாண்மை செழித்து வளர வேண்டும் என்பதற்காகவே தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது  எனவும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக வசூல் செய்ய இலக்கௌ என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் புன்செய் பயிர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழ்நாட்டில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததால் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது எனவும் 2021-22 வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1930 ஹெக்டேர் விவசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக பரப்பு அதிகரித்தது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.