தமிழ்நாடு

எலிகளை கொல்ல 3 லட்சம் விஷ  உணவு பொட்டலங்கள்... குறுவை சாகுபடி பாதிப்பை தடுக்க நடவடிக்கை...

திருத்துணைப்பூண்டியில் குறுவை சாகுபடி பாதிப்பை தடுக்க எலி ஒழிப்பு முகாம் நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV
குருவை பயிரை பாதுகாக்க ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முகாம் திருத்துறைப்பூண்டி வட்டம் அம்மனுரில் துவக்கம் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு அதிக அளவில் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை சாகுபடியில் 18% எலிகளால் பாதிப்படைகிறது. அதனால் இந்த ஆண்டு எலிகளை ஒழிக்கும் விதமாக ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முகாம் திருத்துறைப்பூண்டி அருகே அம்மனூர் ஊராட்சியில் நடைபெற்றது.
தொண்டு நிறுவனங்களில் உதவியுடன் வேளாண் இணை இயக்குனர்  ஆணைப்படி அம்மனூர், கச்சனம் .விளத்தூர். கோமல்.ஆதனூர், திருவலஞ்சுழி. ஆண்டாங்கரை.குறும்பல். கட்டிமேடு. ஆதிரங்கம் சேகல். மேலமருதூர் எழிலூர்,  கொருக்கை விளக்குடி, காடுவா கொத்தமங்கலம் முதலிய கிராமங்களில் ஒரு கிராமத்துக்கு 100 கிலோ அரிசி குருணை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ எலி மருந்து ஆகியவற்றை கலந்து ஐந்து கிராம் அளவுள்ள சிறு பொட்டலமாக மடித்து எலிகள் நடமாட்டம் உள்ள வயல் வரப்புகளில் இடுவதன் மூலம் எலிகளுக்கு விஷ உணவவிட்டு எளிதாக ஒட்டுமொத்தமாக எலிகளை ஒழிக்க திட்டமிடப்பட்டது. 1500 கிலோ அரிசி குருணை 15 லிட்டர் தேங்காய் எண்ணெய் 15 கிலோ புரோமோடையலான் எலி மருந்து கலந்த  மூன்று லட்சம்விஷ உணவு பொட்டலங்கள் அனைத்து ஊராட்சிகளில் தயாரிக்கப்பட்டு அனைத்து கிராமங்களின் வயல்களிலும் விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர்கள் ரவிச்சந்திரன் மற்றும் உத்திராபதி தொடங்கி வைத்தார்கள்.  குறுவை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் பேசினார் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி அனைவரையும் வரவேற்றார். மேலும் துணை வேளாண் அலுவலர் ரவி வேளாண்மை உதவி அலுவலர்கள் மகேஷ் ஜோதி கணேசன் சாமிநாதன் ரமேஷ் ஸ்ரீதரன் மகரஜோதி ஊராட்சி செயலாளர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் அதிகாரிகள் குறுவை சாகுபடியில் பட்டம் பிரித்தல் வேப்பம் புண்ணாக்கு உரம் இடுதல் பொட்டாஷ் உரங்கள் இடுதல் எலிஒழிப்பதற்கான எலி ஒழிப்பு மருந்தை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது அரசின் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை சிறப்புகள் அனைத்தையும் விவசாயிகளிடையே விளக்கிப் பேசினர் இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.