தமிழ்நாடு

சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் அதிரடி பதில்!

Tamil Selvi Selvakumar

சிதம்பரத்தில்  வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது என்றும், பருத்தி நூற்பாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி, பதில் நேரத்தில் பேசிய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் முட்லூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படுமா என்றும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் சார்பில் நூற்பாலை அமைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிக்க : புதை மின் வடங்களுக்கு ரூ.6.57 கோடி நிதி ஒதுக்கீடு - செந்தில் பாலாஜி பதில்!

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தா.மோ, அன்பரசன், இப்பகுதியில் மல்லிகை பூக்கள் உற்பத்தி ஆண்டு முழுவதும் சீராக இல்லாததால் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது என்று பதிலளித்தார். மேலும்,  ஊரக கடன் சார்பில் தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும் என்றும், முதலீட்டாளர்கள் முன்வந்தால் நூற்பாலை அமைப்பது குறித்து அரசு ஆய்வு செய்யும் என்றும் பதிலளித்தார்.