தமிழ்நாடு

மொபைல் ஆப் மூலம் அரசு நேரடியாக மக்களுக்கு சென்று சேர புதிய மாடல் .... பிடிஆர்!!!

Malaimurasu Seithigal TV

பொதுமக்கள் நேரில் வராமலே அரசின் அனைத்து திட்டங்களையும், சேவைகளையும் பெறுவதற்கு ஆன்லைன் சேவை மற்றும் மொபைல் ஆப் கொண்ட புதிய மாடல் அமைக்கப்பட்டு வருவதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கேள்வி:

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி,  40 ஆண்டுகால கோரிக்கையான இந்த சார் கருவூலம் மூலம் என்பதில், 2 நகராட்சி, 3 பேரூராட்சி மற்றும் 28 கிராம ஊராட்சிகளை கொண்ட தாலுகாவாக உள்ள கடையநல்லூரில் சார் கருவூலத்தை விரைந்து அமைக்க வேண்டுமென கூறினார். 

மானிய கோரிக்கை:

இதற்கு பதிலளித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், கருவூல கணக்கு துறை சிறப்பாக செயல்பட பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்த அவர் நாளை மறுநாள் வரக் கூடிய துறையின் மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகளில் ஆட்டோமேஷன், ஆன்லைன், மொபைல் ஆப் மூலம் அரசு நேரடியாக மக்களுக்கு சென்று சேர புதிய மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

அரசு கருவூலம்:

மேலும் ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்பு என்பது செய்யப்பட உள்ளதாகவும் உதாரணமாக ஒரு பணப்பரிமாற்றம் செய்வதற்கு 9 தனி நபர்கள் அப்ரூவல் என்பது பழைய பேப்பர் முறைப்படி இன்னும் இருக்கிறது எனத் தெரிவித்த அவர் அதை திருத்தம் செய்ய வேண்டி உள்ளது எனவும் கூறினார்.  அவ்வாறு திருத்தம் செய்யும் பொழுது அது ஏற்படக்கூடிய குறை நிறைகளை கணக்கில் கொண்டு கருவூலம் சிறப்பாக செயல்பட இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

முதன்மையான பணிகள்:

தொடர்ந்து பேசிய நிதியமைச்சர்  நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றுடன் தான் அரசு பல்லாண்டுகளாக இயங்கி வருகின்றது எனவும் அரசிடம் இருக்கக்கூடிய குறைவான நிதியைக் கொண்டு முதலில் குளங்களை தூர்வாறுதல், குடிநீர்,  சாலை, பாலம் அமைத்தல்,  மக்களை தேடிச் செல்லக்கூடிய திட்டங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றது எனவும் இதை தொடர்ந்து, அரசுக்கு பெறவேண்டிய தொகைகள், கட்டணங்கள் மக்களுக்கு சேர வேண்டிய சேவை என்பது மிக சுலபமாக ஆன்லைன் வாயிலாகவோ அல்லது இல்லம் தேடியோ மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

மொபைல் ஆப் மூலமாக:

இந்தியாவில் அதிகமாக ஸ்மார்ட்போன் வைத்திருப்பது தமிழ்நாட்டில் தான் என்ற புள்ளிவிவரம் உள்ளது எனவும் எனவே அதை பயன்படுத்தி பென்ஷனாக இருந்தாலும், பத்திர பதிவாக இருந்தாலும் மக்களுக்கு தேடி மருத்துவம், இல்லும் தேடி கல்வி என்பது போல ஆன்லைன் வாயிலாகவோ அல்லது மொபைல் ஆப் மூலமாகவோ மக்களுக்கு சேவைகளை சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.