தமிழ்நாடு

“7500 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் ...” நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  மேலும் 4 அடிப்படை தத்துவங்கள் அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வதாகவும் கூறியுள்ளார்.  தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் நிதிநிலை சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்த பழனிவேல் தியாகராஜன் மொழிப்போர் தியாகியான தாளமுத்து, நடராஜன் அகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் அண்ணல் அம்பேத்காரின் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி மேலும் 8 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் முகாம்களில் உள்ளவர்களுக்காக 7500 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.