தமிழ்நாடு

தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை...!

Tamil Selvi Selvakumar

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாக தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாக தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அளித்த  பரிந்துரையின் பேரில் அதிக நச்சுத் தன்மை வாய்ந்த மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ்,   அசிபேட்,  ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ், சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ்  ஆகிய ஆறு பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, ஏற்கனவே 60நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணையை  பிறப்பித்த நிலையில், தற்போது நிரந்தமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.