தமிழ்நாடு

50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்.... அமைச்சர் விளக்கம்...!!!

Malaimurasu Seithigal TV

அனைத்து துறையின் கீழ் உள்ள பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வந்துள்ளதை கூடுதல் பொறுப்பாக பார்ப்பதாகவும், பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து  சட்டசபையில் விளக்கம் அளிப்பேன் எனவும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

வானவில் மன்றம்:

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைபெறும் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாலார் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தொடக்ககல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் பங்கேற்றனர்.

பகுத்தறிவு:

இந்நிகழ்ச்சியின் மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் பகுத்தறிந்து ஏன், எதற்கு என்று கேட்பதால்தான் பெரியார் என்று பெயர் உள்ள இம்மையத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது எனவும் பெரியார்தான் ஏன், எதற்கு என்று கேட்டு பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி சென்றவர் எனவும் கூறினார்.  

மேலும் அவரது தொகுதியில்தான் இந்த திட்டத்தை முதலமைச்சர்  தொடங்கி வைத்தார் எனவும் 25 லட்சம் மாணவரகள் பயன்பெறும் வகையில் 25 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

திட்ட நோக்கம்:

பள்ளி மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக படிப்பதற்கு செய்முறையாக விளக்கமளிக்க வேண்டும் என்றுதான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது எனவும் இத்திட்டத்தில் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு 150 பேர் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளனர் எனவும் தெரிவித்த அவர் ஒரு வார காலமாக இங்கு தங்கி இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்கள் எனவும் 
இதில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம் எனவும் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை நல்லபடியாக காட்சிப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

அடுத்த தலைமுறை:

அரசியலாக இருந்தாலும் அறிவியலாக இருந்தாலும் அடுத்த தலைமுறை மாணவர்கள்தான் எனவும் அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் ஆசை எனவும் கூறினார்.  மேலும் அதில் மாணவர்களைப் போன்ற இளம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் சீனர்கள் போன்று நாமும் நிறைய கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பெருமைப்படும் அளவுக்கு புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தரமான கல்வி:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் இதனை கூடுதல் பொறுப்பாக பார்க்கிறோம் எனவும் கூறிய அவர் அனைத்து துறையின் கீழ் உள்ள பள்ளிகளும் எங்களின் கீழ் வந்துள்ளதால் அதனை அவர்களுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பாக பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

இன்று விளக்கம்:

மேலும் முதலமைச்சர் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுன் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் எனவும் 50 ஆயிரம் மாணவர்களுகள் ஆப்சென்ட் ஆனது குறித்து  சட்டசபையில் விளக்கம் அளிக்க உள்ளேன் எனவும் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.