சோழர் கால பாசன திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தினை பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 நாள் நடை பயணத்தை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டார்.
இந்நிலையில், இத்திட்டத்தை தமிழக அரசு விரைந்து அமல்படுத்த வலியுறுத்தி, 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தினை, அன்புமணி ராமதாஸ், ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்கிற பொன்னேரியில் தொடங்கி வைத்தார்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். இதனையடுத்து 1பொதுமக்களிடம் வாங்கப்பட்ட 5 லட்சம் கையெழுத்து ஆவனங்களை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கி, அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சேலத்தில் கொடிகட்டி பறக்கும் லாட்டரி விற்பனை... வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நபர் மீது சராமாரி தாக்குதல்!