தமிழ்நாடு

ஜூன் மாதத்தில் 36 தீர்மானங்கள்!

Malaimurasu Seithigal TV

ஜூன் மாதத்திற்கான மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

அவை, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் சிலை, பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அவரது சிலை நிறுவதடையின்மை சான்று வழங்கு தொடர்பான அனுமதி.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை  முக்கிய இடங்களுக்கு முக்கிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல அனுமதி.

தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மத்திய அரசின்  கல்வி நிறுவனங்களில் சேரும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு  முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்த அனுமதி.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெறும் ஆசிரியர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல அனுமதி.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளிகளில் 100% ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை 1500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்வு.

அரசு பொதுத்தேர்வில் அரசு பொது தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை அமைக்க அனுமதி.

சென்னை மாநகராட்சியின் பகுதிகளில் 53 இடங்களில் செயல்பட்ட அம்மா குடிநீர் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் அளிக்க அனுமதி.

சென்னை பிராட்வேயில் உள்ள பேருந்து நிலையத்தை வணிக வளாகத்துடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்ற அனுமதி, உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.