தமிழ்நாடு

 இன்று  2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடாில் 7 சட்ட மசோதாக்கல் தாக்கல் செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பேரவை தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

பின்னர் வினாக்கள், விடைகள் நேரம் நடைபெறும். இதில் உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசுவார்கள். தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் விடுதலை விவகாரம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புவாா்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்தச் சட்டம், மதுவிலக்கு திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஏழு சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதனை அந்தந்த துறையை சாா்ந்த அமைச்சா்கள் தாக்கல் செய்யவுள்ளனா். 

பின்னர் நடைபெறவுள்ள கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு பேசுவாா்கள். இறுதியாக, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இரண்டாம் திருத்தச் சட்ட முன்வடிவை உடனே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தனி தீர்மானம் கொண்டு வரவுள்ளாா். அதன்படி இந்த சட்ட முன்வடிவு இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.