தமிழ்நாடு

253 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Tamil Selvi Selvakumar

ஊரக வளர்ச்சி துறைக்கு வாங்கப்பட்ட 253 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அத்துறை சார்பில்,  23 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 253 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சென்னையில் நடைபெறும், 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்த கோப்பை தற்போது சென்னை வந்தடைந்ததையடுத்து, இக்கோப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறை சார்ந்த அதிகரிகள் பங்கேற்றனர்.