தமிழ்நாடு

மழை நீரில் மூழ்கிய 10,000 ஏக்கர் நெற்பயிர்கள்...கோரிக்கை விடுத்த விவசாயிகள்!

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கனமழை காரணமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த குருபாதமேடு கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தேங்கிய மழைநீரில் மூழ்கி அழிந்துவிட்டது. 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, விவசாய நிலங்களில் முறையான மழை நீர் வடிகால்வாய் இல்லாததே மழை நீர் தேக்கத்திற்கு காரணம் என்றும், போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீரை அகற்ற வேண்டும் எனவும்  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பாதிப்படைந்த நெற்பயர்களுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.