தமிழ்நாடு

700லிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்ட இலவச மின்சாரம்...!!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில் அதனை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மாநிலத்தில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.