தமிழ்நாடு

அறிவிக்கப்பட்ட மாதம் 1000 ரூபாய் திட்டம்.... எப்போது முதல்!!!

Malaimurasu Seithigal TV

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியாண்டில் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

நிதிநிலை அறிக்கை:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பெண்களுக்காக..:

பெண்களை உயர்த்தும் திட்டங்களை திமுக அரசு அமையும் போதெல்லாம் செயல்படுத்தி வருவதாகவும் மகளிர் சொத்துரிமை உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு என பார்த்து பார்த்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் மக்களுடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாதம்...:

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியாண்டில் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.  குடும்பத் தலைவிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வந்த மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளார் பிடிஆர்.  

வழிமுறைகள்:

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவு கூறியுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மேலும் மகளிர் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் இதற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார் .