தமிழ்நாடு

ரத்ததான விழிப்புணர்வு : 10 கிலோ மீட்டர் துார உதிரம் மாரத்தான் போட்டி...!

Tamil Selvi Selvakumar

கோவை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை மத்திய அரசின் நிதியில் செய்து தரக்கோரி, மத்திய அமைச்சர் மாண்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவக்கல்லூரி இரத்த தான கழகம் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 10 கிலோ மீட்டர் துார உதிரம் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதனையடுத்து, உதிரம் '23 குருதி கொடை மாரத்தான் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசளித்து குருதி கொடையை ஊக்குவிக்கும் விதமாய் இரத்தம் தானம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை எய்ம்ஸ்க்கான நிதி பங்களிப்பை மத்திய அரசு கொடுத்திருந்தால் நிச்சயம் அடிக்கல் நாட்டும் பணியோடு நின்று இருக்காது என குற்றச்சாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். 

தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெய்க்கா நிதி உதவி இல்லாமல், மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.