புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான புதிய பெயர்களை பரிசீலிக்க கொலிஜியம் இந்த வாரம் கூட்டத்தை கூட்ட வாய்ப்புள்ளது. பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட பின், அரசுக்கு அனுப்பி லிஸ்ட் அனுப்பி வைக்கப்படும்.
புதிய நியமனம்?:
நீதிபதி தீபங்கர் தத்தா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்ற பிறகு, தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியம் மீண்டும் புதிய பெயர்களை அரசுக்கு பரிந்துரைக்கவுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, புதிய பெயர்களை அரசுக்கு அனுப்ப கொலிஜியம் இந்த வாரம் கூட்டத்தை கூட்ட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இக்கூட்டத்தில் தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் கலந்து கொண்டு புதிய பெயர்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள். சமீபத்தில் கொலீஜியம் பரிந்துரைத்த 19 பெயர்களை அரசு நிராகரித்து லிஸ்ட்டை திரும்ப அனுப்பியது.
கிட்டத்தட்ட...:
இரண்டு மாதங்களுக்குப் பிறகு தீபங்கர் தத்தா நியமனம் குறித்து அரசு முடிவெடுத்துள்ளது. பெயர் பரிந்துரைக்கப்பட்ட லிஸ்ட்டை கிட்டத்தட்ட 2 மாதங்கள் தன்னிடம் வைத்திருந்த பின்னரே தீபங்கர் தத்தா நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இதற்கு முன்பு, நீதிபதி தீபாங்கரின் பெயர் அங்கீகரிக்கப்படும் வரை புதிய பெயர்களின் பரிந்துரையை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்ப மாட்டோம் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியமும் கூறியிருந்தது.
ஒரே முஸ்லீம் நீதிபதி:
ஊடக அறிக்கையின்படி, இந்த முறை கொலிஜியம் 10 புதிய பெயர்களின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது மட்டுமின்றி, ஒரு முஸ்லிம் நீதிபதியை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பவும் கொலிஜியம் பரிந்துரை செய்யும் என தெரிகிறது. ஜனவரி 4-ம் தேதி ஓய்வுபெறும் நீதிபதி அப்துல் நசீர் மட்டுமே தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ள ஒரே முஸ்லிம் நீதிபதி ஆவார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இந்தி தெரியாதது ஒரு குத்தமா...இப்படியா அசிங்கப்படுத்துவீங்க...வருந்திய காங்கிரஸ் எம்.பி!!!