இந்தியா

ஊருக்குள் புகும் வனவிலங்குகள்...! அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சந்தூர் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற அந்த தொகுதி எம்எல்ஏ சென்றுள்ளார். அப்போது, தொகுதி மக்களை காப்பாற்ற மறந்ததாக கூறி அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் ஊருக்குள் நுழைந்துள்ளது. அந்த சமயத்தில் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் யாருமே அந்த பகுதியில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் யானைகளுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். பின்னர் யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. 

இந்நிலையில், யானைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கு உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும் யாருக்கும் பயன்படாத நிலையில் உள்ள வனத்துறை அலுவலகம் எதற்கு என கூறி கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர்.