இந்தியா

நெடுஞ்சாலையில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ள வாகனங்கள்... எவை எவை?!!

Malaimurasu Seithigal TV

டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விதிகள்:

நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலையை பிப்ரவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, சில விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  அதன்படி அனைத்து வகை வாகனங்களிலும் சில வாகனங்கள் மட்டும் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  தேசிய நெடுஞ்சாலை அதிகார அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

எவை எவை?:

இதன்படி அதிவேக நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மோட்டார் அல்லாத வாகனங்களுடன், விவசாய டிராக்டர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

காரணம் என்ன?:

அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் வேக வரம்பானது நகர்ப்புற சாலைகளை விட அதிகமாக உள்ளது.  இதற்குக் காரணம், அதிவேக நெடுஞ்சாலையானது, சாலைக்கு வெளியில் இருந்து எந்த வாகனமும் வர முடியாத வகையில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளதே ஆகும்.

இவற்றில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் சரியான பாதைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.  இதுபோன்ற சூழலில், சிறிய வாகனங்கள் அல்லது மெதுவாக செல்லும் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டால், விபத்து ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது.

-நப்பசலையார்