மேவாதிகள் பற்றிய கருத்தை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் மேவாதிகளை பலவீனமானவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுபவர்கள், அவர்கள் ராமர் மற்றும் கிருஷ்ணரின் வழித்தோன்றல்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார் ராஜஸ்தான் எம்.எல்.ஏ ஸ்ஃபியா.
இதற்காக முழு வரலாற்றையும் எடுத்து படித்ததாகவும் மேவாதிகள் ராமர் மற்றும் கிருஷ்ணரின் வழித்தோன்றல்கள் என்பது அப்போது அவருக்கு தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இவர்கள் மியோஸ் ஆல்வார், பரத்பூர் மற்றும் நூஹ் ஆகிய இடங்களிலும், கிருஷ்ணர் பிறந்த மதுராவிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்ந்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
மதம் மாறியிருக்கலாம் ஆனால் இரத்தம் ஒன்றுதான் எனக் கூறியுள்ள ஸ்ஃபியா மனிதனின் இரத்தம் மாறவில்லை எனவும் எங்களிடம் ராமர் மற்றும் கிருஷ்ணரின் இரத்தம் மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். வரும் பட்ஜெட்டில் இவர்களின் மேம்பாட்டிற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் விவாதம் தொடங்கியுள்ளது. ஸஃபியாவின் இந்தக் கருத்திலிருந்து பல விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், அவரது இந்த அறிவிப்பு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நப்பசலையார்