கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சரின் தொகுதியில் வாக்குச்சாவடியை ஆய்வு செய்ய வந்த வேட்பாளரை வாக்காளர்கள் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யாவும், பாஜக சார்பில் அமைச்சர் சோமண்ணாவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இத்தொகுதிக்குட்பட்ட நஞ்சன்கூடு வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சோமண்ணாவை வாக்குச் சாவடிக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் போலீசார் உதவியுடன் சென்ற அமைச்சர் சோமண்ணா வாக்குப்பதிவை ஆய்வு செய்தார்.