இந்தியாவில் ஒன்பது இந்திய மேலாண்மை நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளாக பிஎச்டி சேர்க்கையில் இடஒதுக்கீடு விதிமுறைகளை மீறுவதாக ஆர்டிஐ-க்கு மாணவர்களின் கூட்டான அம்பேத்கர் பெரியார் புலே ஆய்வு வட்டம், ஐஐடி பாம்பே தாக்கல் செய்த மனு மூலம் பெறப்பட்டுள்ளது.
ஐஐஎம்-களில் இருந்து பெறப்பட்ட ஆர்டிஐ தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் 2022 வரை) பட்டியல் இன மக்கள், பழங்குடியின மக்கள் , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 188 மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்பது ஐஐஎம்களில், 5.4 சதவீதம் எஸ்சி மாணவர்கள், 1.8 சதவீதம் எஸ்டி மற்றும் 16.7 சதவீதம் ஓபிசி மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர் எனவும் 76.1 சதவீத மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களை உள்ளடக்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிக்கை மூலம் தெரிய வருகிறது.
ஐஐஎம் இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி, எஸ்சிக்கு 110 இடங்களும், எஸ்டிக்கு 55 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 199 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 2018 முதல் 2022 வரை ஐஐஎம்களில் 40 எஸ்சி, 13 எஸ்டி மற்றும் 123 ஓபிசி மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஐ.டி.பம்பாய் ”கடந்த 5 ஆண்டுகளில் 188 பட்டியலின மாணவர்களுக்கு உரிய இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன” என்று மாணவர்களின் கூட்டமைப்பானது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை டேக் செய்து ட்வீட் செய்துள்ளது.
ஐஐடி சேர்க்கை விதிமுறைகளின்படி, 27% இடங்கள் ஓபிசி க்கும், 15% எஸ்சி-க்கும், 7.5% எஸ்டி பிரிவினருக்கும், 5% பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு , மற்றும் 10% பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் ஐஐஎம்-ல் பின்பற்றப்படும் அதே நிலை தான் உள்ளது. மக்களவையின் பதிலின்படி, 2021 ஆம் ஆண்டில் ஐஐடிகள் 2.5% எஸ்டி மாணவர்களை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பாரத் ஜடோ யாத்ராவின் யாத்ரிகர்கள்...!!!