மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த மணிப்பூரையும் பதற்றம் மிக்க மாநிலாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே நடந்த வன்முறையைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் சுமார் 3 மாதங்களாக தேடப்பட்டு வந்த மெய்தீ சமூகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டதால் மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்பால் நகரின் மையப்பகுதியில் உள்ள கோங்ஜோம் என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகத்தை பொதுமக்கள் எரித்தனர். மேலும் மணிப்பூர் முதலமைச்சரின் உருவ பொம்மையையும் மாணவர்கள் எரித்தனர்.
இம்பாலாவில் உள்ள முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதனால் மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து வருகிறது.
இதனால் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், 19 காவல்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க || "அவருக்கு ஜெனிடிக் பாதிப்பு உள்ளது" பெண்ணின் கை அகற்றப்பட்டது குறித்து மா.சுப்பிரமணியன் விளக்கம்!!