இந்தியா

அடி மேல் அடி வாங்கும் உத்தவ் தாக்கரே.... உச்சநீதிமன்றத்திலும் அவமதிப்பு?!!!

Malaimurasu Seithigal TV

சிவசேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவிற்குப் பிறகு, உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

சிவசேனாவின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் ஷிண்டே அணிக்கு வழங்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உத்தவ் குழுவின் வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து,  விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

மறுத்த உச்சநீதிமன்றம்:

உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியின் மனுவை முன்கூட்டியே பட்டியலிட வேண்டுமென இந்த வழக்கு தொடர்பான அமர்வு முன் உத்தவ் தாக்கரே அணியின் வழக்கறிஞரான சந்திரசூட் இதைக் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  "விதி அனைவருக்கும் சமமானது எனவும் நாளை உச்சநீதிமன்றத்திற்குரிய நடைமுறையில் வாருங்கள்" என அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது.

சிறப்பாக செயல்படும் ஷிண்டே:

ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் பெயரையும் தேர்தல் சின்னத்தையும் பறித்துக்கொண்டு அமைதியாக இருந்து விடவில்லை.  சிவசேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவை நிலைநிறுத்த  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.  இதற்கு ஒரு நாள் முன்பதாகவே ஷிண்டே அணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

-நப்பசலையார்