தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்தது தொடர்பாக BARC ரேட்டிங் ஏஜென்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் லுல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிஆர்பி என்பது:
டிஆர்பி என்பது குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சி சேனல் பெறும் அளவீட்டு புள்ளிகள் ஆகும். அதாவது, மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டு அளவாகும்.
குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அல்லது தொடரினை பார்த்து ரசித்த பார்வையாளர்களின் எண்ணிக்கையே அந்த தொலைக்காட்சி சேனலின் மதிப்பீட்டுப் புள்ளிகளாக கணக்கிடப்படுகிறது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்:
தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்தது தொடர்பாக BARC ரேட்டிங் ஏஜென்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் லுல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லுல்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை மீது நீதிமன்றம் டிசம்பர் 15ஆம் தேதி விசாரணை செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. லுல்லா டிஆர்பியை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விளம்பரதாரரின் புகாரின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணையில், சந்தாதாரர்கள் மட்டத்தில் எந்த தொலைக்காட்சி சேனலிலும் முறைகேடுகள் நடந்ததை நிரூபிக்கும் விதமாக எந்த ஆதாரத்தையும் சிபிஐ கண்டுபிடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: குஜராத்தில் கிரிமினல் வழக்கு குற்றவாளிகள் அமைச்சர்களா பொறுப்பேற்றுள்ளனரா? அறிக்கை தெரிவிப்பதென்ன?!!