இந்தியா

"இன்று சர்வதேச துரோகிகள் தினம்" சஞ்சய் ராவத் கிண்டல்! 

Malaimurasu Seithigal TV

இன்று சர்வதேச துரோகிகள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என சிசவேனை (பல்தாக்கரே) செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிரா சட்ட மன்ற ஆளுங்கட்சியான சிவசேனா இரண்டாக பிளவுற்று இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இந்த நாளை "சர்வதேச துரோகிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென" உத்தவ் தாக்கரே ஆதரவு சிசவேனை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கிண்டலாக தெரிவித்துள்ளார். 

சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு 40 எம்எல்ஏக்களுடன் வெளியேறி பாஜகவில் இணைந்து முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் துரோகத்தை ஊக்குவிப்பதையே பணியாகக் கொண்டுள்ளனர் என சஞ்சய் ராவத் எம்.பி. விமர்சித்துள்ளார். இன்று அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, இதுதொடர்பாக ஐ.நா.வில் விவாதித்து சர்வதேச துரோகிகள் தினத்தை அறிவிக்க வேண்டுமெனவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.