நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் மற்றும் நீதிபதி முகமது நிஜாமுதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நாராயணுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நிபந்தனை ஜாமீன்:
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நாராயண் மீது 21 வயது பெண் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் போர்ட் பிளேர் சர்க்யூட் அமர்ட்வு ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் மற்றும் நீதிபதி முகமது நிஜாமுதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நாராயணுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
நிபந்தனைகள் என்ன?:
சாட்சி மீது செல்வாக்கு செலுத்த அதிகாரிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் எந்த அதிகாரியையும், பாதிக்கப்பட்ட தரப்பினரையும் அழைத்து பேசக் கூடாது எனவும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைத்து நாட்டை விட்டு வெளியேற கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?:
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலைமைச் செயலாளரின் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், நாராயண் உள்ளிட்ட பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு இந்த மாத தொடக்கத்தில் 935 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: நெடுஞ்சாலையில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ள வாகனங்கள்... எவை எவை?!!