இந்தியா

தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த கட்சிகளை கிராமத்தில் நுழைய விடாத கிராம மக்கள்...காரணம் என்ன?!!

Malaimurasu Seithigal TV

ரயில் நிலையத்தில் ரயில் நிற்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  ஒரு நபர் வேறு இடத்திற்குச் செல்ல குறைந்தபட்சம் ரூ.300 செலவழிக்க வேண்டியதாக உள்ளது.

கட்சிகளை புறக்கனிக்கும் கிராமங்கள்:

குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.  இருப்பினும், நவ்சாரி சட்டசபையின் 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அனைத்துக் கட்சிகளைக் குறித்தும் கவலை எழுப்பியுள்ளனர்.  

இந்த கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.  இதுமட்டுமின்றி, பா.ஜ.க., மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் கிராமத்திற்குள் வருவதற்கும், கிராமத்தில் பிரசாரம் செய்வதற்கும் தடை விதித்துள்ளனர். 

காரணம் என்ன?:

இங்குள்ள அஞ்செலி ரயில் நிலையத்தில் உள்ளுர் ரயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும், அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை எனவும், இதனால் மக்கள் கோபமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஞ்செலி ரயில் நிலையம் மற்றும் பிற நிலையங்களில் கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'ரயில் இல்ல, ஓட்டு இல்லை' என, எழுதப்பட்டுள்ளது.

-நப்பசலையார்