இந்தியா

மருத்துவா்கள் போராட்டங்களை கைவிட நாளை மாலை வரை உச்ச நீதிமன்றம் கெடு!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் இதுவரை என்ன விசாரணை நடைபெற்று இருக்கிறது. மேற்கொண்டு என்ன விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Jeeva Bharathi

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை வழக்கில் இதுவரை என்ன விசாரணை நடைபெற்று இருக்கிறது, என்ன மாதிரியான விவரங்கள் தெரியவந்துள்ளன. மேற்கொண்டு என்ன விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

வழக்கு தொடா்பாக மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், 23 நோயாளிகள் உயிரிழந்து இருப்பதாக மேற்குவங்க மாநில அரசு தொிவித்துள்ளது.இந்நிலையில், மருத்துவா்கள் போராட்டங்களை கைவிட்டு நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு மருத்துவா்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அரசு சாா்பில் துறை சாா்ந்த நடவடிக்கைகள் எடுப்பதை தடுக்க முடியாது எனவும் எச்சாிக்கை விடுத்துள்ளது.