இந்தியா

மாணவர்களை மயக்கமடைய செய்த மதிய உணவு....உணவில் பாம்பிருந்ததா?!!

Malaimurasu Seithigal TV

மதிய உணவை உட்கொண்ட தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் வாந்தி, மயக்கமடைந்ததாக தகவல் வெளியாகியது.

பாம்பின் உணவு:

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் மதிய உணவு உண்ட பள்ளி மாணவர்கள் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.  அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது குழந்தைகளின் உணவில் பாம்பு இருந்ததாக கூறப்படுகிறது.  

முற்றுகை:

இந்த சம்பவம் வெளியில் வந்ததையடுத்து, குழந்தைகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு பள்ளி தலைமை ஆசிரியரையும் தாக்கினர்.

நடந்தது என்ன?:

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தின் மயூரேஷ்வர் தொகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் மதிய உணவை உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதை குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, பள்ளியில் உணவு தயாரித்த ஊழியர் ஒருவர் பருப்பு நிரப்பப்பட்ட கொள்கலனில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.

தொடர்ந்து ஊழியர் கூறுகையில், “உணவு சாப்பிட்டதும் குழந்தைகளுக்கு வாந்தி எடுக்க ஆரம்பித்தனர்.  இதனால் பாதிப்படைந்த மாணவர்கள் கராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.” எனத் தெரிவித்தார்.

மாணவர்கள் நிலை:

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை தவிர மற்ற குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று ஆய்வு அதிகாரி கூறியுள்ளார். 

-நப்பசலையார்