இந்தியா

தேர்தலுக்காக வேலையை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி... வெற்றியா?!!

Malaimurasu Seithigal TV

தமிழக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ஷம்பு கல்லோலிகர் கர்நாடக தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 32 சதவீத வாக்குகள் பெற்று  காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்பொழுது வெளியாகிய நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இந்த நிலையில் தமிழக அரசில் சமூக நலத்துறையில் முதன்மைச் செயலாளராக ஷம்பு கல்லோலிகர் பணியாற்றி வந்தார்.  அவருக்கு ஓய்வு பெறும் வயது நெருங்கிய நிலையில் தனது 58வது வயதில் கர்நாடகா மாநில தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு கர்நாடக மாநில உள்ள ரைபேக் சட்டமன்ற தொகுதியில் சுயேசையாக போட்டியிட்டார்.  

அவர் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுவதற்காக சீட்டு கேட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட சீட்டு கொடுக்கவில்லை. 

அதன் பிறகு சுயேட்சையாக ரைபேக் தொகுதியில் போட்டியிட்டு 32 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.  அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி முதலிடமும், தமிழகத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இரண்டாவது இடமும், கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷம்பு கல்லோலிகர் தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக உள்ள அமுதா ஐஏஎஸ் அவர்களின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.