இந்தியா

சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு... மேற்குவங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திரிணால் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். சுவேந்து அதிகாரிக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில் கடந்த மே 18-ம் தேதி சுவேந்து அதிகாரிக்கு வழங்கப்பட்ட மாநில பாதுகாப்பை மேற்கு வங்க அரசு விலக்கிக்கொண்டது.
சுவேந்து அதிகாரி மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்புடன் இருப்பதால் அவருக்கு மாநில அரசின் பாதுகாப்பு தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சுவேந்து அதிகாரி தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள சுவேந்து அதிகாரிக்கு மாநில அரசின் பாதுகாப்பு தேவையில்லை என்றாலும், எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் மாநில அரசு ஆளாகாமல் இருக்க பாதுகாப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.