மாநிலத்தில் பைக் டாக்சிகளை அனுமதிக்கும் கொள்கையை வகுப்பதில் முடிவெடுக்காத மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெளிவு வேண்டும்:
மாநிலத்தில் பைக் டாக்சிகளை அனுமதிக்கும் கொள்கையை வகுப்பதில் முடிவெடுக்காத மகாராஷ்டிர அரசை பம்பாய் உயர்நீதிமன்றம் செவ்வாய்கிழமை கடுமையாக பேசியுள்ளது. மேலும் அதன் நிலைப்பாட்டை ஏதாவது ஒரு வடிவத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
வழக்கு என்ன?:
புனே மற்றும் மும்பையில் உள்ள ரேபிடோ பைக் டாக்சி சேவைகளை நடத்தும் ரூபன் டிரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பைக் டாக்சி அக்ரிகேட்டர் உரிமம் பெற அனுமதிக்கும் மாநில அரசின் ஒப்புதலை வேண்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. ஒரு கொள்கையை உருவாக்கும் வரை இதுபோன்ற பைக் டாக்சிகளை இயக்க முடியாது என மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
விரைவான கொள்கை:
அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த, உயர்நீதிமன்றம் அரசின் வாதங்கள் பகுத்தறிவற்றவை என்று கூறியுள்ளது. ஒரு கொள்கையை உருவாக்கும் வரை இதுபோன்ற பைக் டாக்சிகளை இயக்க முடியாது என்று கூறும் அரசாங்கம் அதன் கொள்கையை எப்போது கொண்டு வரும் என்று அது தெளிவுபடுத்தவில்லை எனவும் கூறியுள்ளது. தற்காலிக முடிவாக இருந்தாலும் விரைவான முடிவை அறிவிக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-நப்பசலையார்