இந்தியா

சர்ச்சையை ஏற்படுத்திய ‘விவேகா வகுப்பறைகள்’....அது என்ன விவேகா வகுப்பறைகள்?!!

Malaimurasu Seithigal TV

கர்நாடகாவில் 'விவேகா வகுப்பறைகள்' காவி நிறத்தில் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

அரசியல் செய்வது சரியா?:

நிறம் குறித்த காங்கிரசின் எதிர்ப்புக்கு, காவி நிறத்தின் மீது காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு கோபம்? என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்த நிறம் நாட்டின் தேசியக் கொடியிலும் உள்ளதே எனக் கூறியுள்ளார் பசவராஜ். இதுபோன்ற விவகாரங்களில் அரசியல் செய்வது சரியல்ல என்று முதலமைச்சர்  கூறினார்.  

விவேகா வகுப்பறைகளின் நிறம் காவி நிறத்தில் இருப்பதாகவும், அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 

விவேகா வகுப்பறைகள்:

கர்நாடகாவின் பாஜக அரசு, மாநிலத்தின் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 8,100 வகுப்பறைகளுக்கு சுவாமி விவேகானந்தரின் பெயரை வைக்க முடிவு செய்துள்ளது.  அதனுடன் அந்த வகுப்பறைகளுக்கு சுவாமி விவேகானந்தரின் துறவற ஆடையான காவி வண்ணம் பூச வேண்டும் என்றும் மாநில அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள கர்நாடகாவில் இந்த திட்டம் மற்றொரு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

-நப்பசலையார்