இந்தியா

தெலங்கானா: சாதி மறுப்பு திருமணம்; நண்பர்கள் வீட்டை அடித்து உடைத்த பெண்ணின் பெற்றோர்!

Malaimurasu Seithigal TV

தெலுங்கானாவில் வேற்று சாதியினரை காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெற்றோர் திருமணம் அத்திருமணத்திற்கு உதவிய நண்பர்கள் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் அறங்கேறியுள்ளது.
 
தெலங்கானா மாநிலம், நர்சம்பேட்டை அருகேயுள்ள இடிகலப்பள்ளி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ரவீந்தரா. இவரது மகள் காவ்யா ஸ்ரீ  ஹனுமகொண்டா  ஹசன்பர்த்தி கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரியில்  படிக்கும் ரஞ்சித்துடன் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வயது வந்தோர் என்பதால்  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதுகுறித்து இருவரும் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் ரஞ்சித் வேறு சாதி என்பதால்   திருமணத்தை ஏற்க முடியாது என காவ்யா ஸ்ரீயின் தந்தை ரவீந்தர் கூறி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்தார்.  வாரத்தில் பலமுறை பஞ்சாயத்துகள் நடந்தன. ஆனால் காவ்யஸ்ரீ தனது முடிவை மாற்றி கொள்ள மறுத்து விட்டோர். இந்நிலையில் காவ்யா ஸ்ரீ - ரஞ்சித் வீட்டில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர்  தனது பெற்றோருக்கு செல்பி வீடியோ அனுப்பிய காவ்யாஸ்ரீ தான் ரஞ்த்துடன் தான் இருப்பேன் என்றும் என்னை யாரும் தேட வேண்டாம். என்னால் யாருக்காவது தொந்தரவு ஏற்பட்டு இருந்தால் மன்னிக்கவும். எந்த முடிவாக இருந்தாலும் அது ரஞ்சித்துடனே என  செல்ஃபி வீடியோவில் தெரிவித்திருந்தார். இதனால் ரவீந்தர் தனது மகள் மீது கோபமடைந்து  ரஞ்சித் மற்றும் திருமணத்திற்கு உதவிய நண்பர்கள் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். 

அங்கு வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தது மட்டுமின்றி நான்கு வீடுகளுக்கு தீ வைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து அந்த கிராமத்தில் மீண்டும் தகராறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே காவ்யாஸ்ரீ - ரஞ்சித் தம்பதியினர் உயிருக்கு பயந்து  வாரங்கல் காவல் ஆணையர் ரங்கநாத்தை சந்தித்து தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் ரஞ்சித் வீட்டில் தீ வைத்ததில் வீட்டில் இருந்த சான்றிதழ்களும், ₹ 10 லட்ச ரூபாய் பணமும் எரிந்து சாம்பலாயின. 7 சவரன் தங்கமும் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.