காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது "ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள நாள்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.
இதையும் படிக்க || தாய் தந்தையரை கவனிக்க தவறிய மகன்... கம்பி எண்ண வைத்த கோட்டாட்சியர்!!