இந்தியா

நண்பகலில் கரையை கடக்கும் மோச்சா புயல்...!!

Malaimurasu Seithigal TV

மத்திய கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் இன்று நண்பகல் கரையை கடக்கிறது.

கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் உள்ள மிக அதி தீவிர மோக்கா புயல் வடக்கு-வடகிழக்கு நோக்கி கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 17 கிமீ வேகத்தில், வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்க கடலில் போர்ட் பிளேயருக்கு வட-வடமேற்கே சுமார் 790 கி.மீ, காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 300 கி.மீ தொலைவிலும், சிட்வே (மியான்மர்) தென்மேற்கே 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது காக்ஸ் பஜாருக்கு இடையில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும்  மியான்மர் இடையே இன்று நண்பகல் நேரத்தில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.  கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு,  180-190 கிமீ வேகத்தில் இடையே 210 கிமீ வேகத்தில் கூட காற்று வீசக்கூடும்.