நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் - 3 விண்கலம், இந்த ஆண்டின் மத்திய பகுதியில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிவவின் சுற்றுப்பாதைக்கு லேண்டரை எடுத்துச் சென்று தரையிறக்கும் பணிக்காக சந்திராயன் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்கலம் முழுமையாக தயாராக உள்ளதாகவும், இம்முறை ரோவர் வெளியே சென்று குறைந்தபட்சம் பௌர்ணமி நாளிலாவது நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும் எனவும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் சோலார் மிஷன் ஆதித்யா எல்-1 விண்கலமும், விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: வாக்கு எந்திரங்களில் குளறுபடியா... எதிர்க்கட்சிகள் ஆலோசனை!!