இந்தியா

"மகாத்மா காந்தி கொலையில் தொடர்பு உள்ளவர் சாவர்க்கர்..." மறுபடியும் எழுந்த சர்ச்சை...எதற்காக?!!!

Malaimurasu Seithigal TV

கர்நாடக சட்டசபை மண்டபத்தில் வீர் சாவர்க்கரின் புகைப்படம் பொருத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர், கர்நாடகா சட்டசபையான விதானசவுதாவுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விமர்சனம்:

ஆளும் கட்சியான 'பாஜக' சபை நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்று விரும்புவதாலேயே சாவர்க்கர் புகைப்டடைத்தை அவையில் மாட்டியிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  ஏனெனில் அவர்களிடம் வளர்ச்சிக்கான எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை எனவும் காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.   எனவே அதுவே இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம் இடையூறுகளை உருவாக்க விரும்புகிறது எனவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சாவர்க்கர் சர்ச்சைக்குரிய ஆளுமை: 

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா சாவர்க்கரை ஒரு சர்ச்சைக்குரிய ஆளுமை என்று வர்ணித்துள்ளார்.  அதனுடன் “இந்தப் படத்தை வெளியிடுவது தொடர்பாக எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனவும் இது பாஜகவின் செயல்திட்டம்.” எனவும் கூறியுள்ளார்.  மேலும், “ மகாத்மா காந்தி கொலையில் தொடர்பு உள்ளவர் சாவர்க்கர்.  அவர் ஒரு சர்ச்சைக்குரிய ஆளுமை.” எனவும் தெரிவித்துள்ளார் சித்தாராமையா.

முதல் முறையல்ல:

வீர் சாவர்க்கர் தொடர்பாக நாட்டில் சர்ச்சை எழுவது இது முதல் முறையல்ல.  இதற்கு முன்னரும் அவர் தொடர்பாக நாட்டில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.  சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் ஒரு பக்கம் வீர் சாவர்க்கர் இருப்பதாகவும், மறுபுறம் மகாத்மா காந்தியின் கருத்துக்களுக்கு இடையே சண்டை இருப்பதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்