இந்தியா

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2000... எதற்காக?!!

Malaimurasu Seithigal TV

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.  இந்தத் தவணையின் கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வழங்கப்படும்.

கர்நாடகாவில் மோடி:

கர்நாடகா சென்றடைந்துள்ளார் பிரதமர் மோடி.  அங்கு முதலில் சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்த அவர் விழா மேடையில் இருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

13வது தவணை:

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.  இத்திட்டத்தின் கீழ் 16,800 கோடி ரூபாயானது நேரடியாக எட்டு கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்படும்.  இந்திய ரயில்வே மற்றும் ஜல் ஜீவன் மிஷன் ஆகியவற்றுடன் இணைந்து பிஎம்-கிஷான் திட்டத்தின் இன் 13வது தவணையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தவணை கர்நாடகாவின் பெலகாவியில் வெளியிடப்பட்டுள்ளது.   

கலந்துகொண்டோர்:

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் அமைச்சர் மற்றும் செயலாளர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மனோஜ் அஹுஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிகழ்வில் பிஎம்-கிஷான் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் பயனாளிகள் உட்பட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.  இத்திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12வது தவணைகள் கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்