மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் ஒப்புதல் அளித்துள்ளளார்.
மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேறியது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நேற்று கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா்.
இந்த ஒப்புதல் மசோதா பிரதியை ஜகதீப் தன்கரிடம் இருந்து மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அவரது ஒப்புதல் பெற்றவுடன் இந்த மசோதா சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்ச அக்ஸருக்கு பதில் அஸ்வின்..!