இந்தியாவில் 1950களில் இருந்தே குடியரசு தின கொண்டாட்டங்களில் நட்பு நாடுகள் கலந்து கொண்டு வருகின்றன.
நட்பு நாடுகள்:
இந்தியாவில் 1950களில் இருந்தே குடியரசு தின கொண்டாட்டங்களில் நட்பு நாடுகள் கலந்து கொண்டு வருகின்றன. 1950-ல் அப்போது இந்தோனேசியாவின் அதிபராக இருந்த சுகர்னோ தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
1952, 1953, 1966 ஆகிய ஆண்டுகளில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2023 விருந்தினர்:
எகிப்து அதிபர் குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். 2023 குடியரசு தினத்தில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி வெளிநாட்டு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூதரக உறவு:
இந்த ஆண்டு இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடியது. கடந்த மாதம், இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எகிப்து பயணத்தின் போது அதிபர் எல்-சிசியை சந்தித்தனர்.
எகிப்து-இந்தியா உறவு:
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23ஆம் ஆண்டில் ஜி-20 மாநாட்டில் இந்தியா தலைமை வகிக்கும் போது எகிப்து நாடு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், "இந்தியாவும் எகிப்தும் நாகரீக மற்றும் ஆழமான உறவுகளின் அடிப்படையில் நட்புறவை அனுபவிக்கின்றன." என்று தெரிவித்துள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ”மன் கி பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி...சொன்னது என்ன?