இந்தியா

கொரோனா காலத்தில் இதற்கு தடை கிடையாது..! தடையின்றி நடக்கும் ராமர் கோவில் கட்டுமானம்.!   

Malaimurasu Seithigal TV

கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையில் அதை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. 

இதன் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் வழிபாட்டு தளங்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் பல கோவில்களில் திருவிழாக்களும், மசூதி மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நடக்காமல் இருக்கிறது. 

ஆனால் அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோவில் கட்டுமான விவகாரங்கள் ஊரடங்கால் பாதிக்கப்படவில்லை என்றும், அது தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தியில் 'ராமர் கோவில் கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இதுவரை சுமார் 1.20 லட்சம் கன மீட்டர் இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது கோவில் அடிதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், தொழிலாளர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்' என தெரிவித்துள்ளது.