இந்தியா

சீனாவிடமிருந்து நிதி பெறுகிறதா ராஜீவ் காந்தி அறக்கட்டளை?!!! அனுராக் தாக்கூர் கேள்விக்கு ராகுலின் பதிலென்ன?!!

Malaimurasu Seithigal TV

மோடி அரசு பதவிக்கு வந்ததில் இருந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக உலகை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறது.  ஆனால், நமது அண்டை நாடுகளில் சில பயங்கரவாதத்தை ஆதரித்து, அதற்கு ஆதரவாக உரக்கப் பேசி வருகின்றன.

டோக்லாமின் போது..:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார்.  தவாங் விவகாரம் குறித்து எங்களிடம் கேள்வி எழுப்பும் முன், ராஜீவ் காந்தி அறக்கட்டளை குறித்து ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அனுராக் தாக்கூர்.  அதாவது ராஜீவ் காந்தி அறக்கட்டளையானது சீனாவிடம் இருந்து நிதி பெற்று வருகிறதா என்ற கேள்விக்கு சரியான பதில் வேண்டும் என்று தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

மேலும் தாக்கூர் இத்துடன் நில்லாமல் டோக்லாமில் சீன வீரர்களுடன் இந்திய ராணுவம் சண்டையிட்டபோது, ​​சீன அதிகாரிகளுடன் ராகுல் காந்தி இருந்ததைக் குறித்து ராகுல் என்ன கூறுகிறார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

உலகை ஒருங்கிணைக்கும் மோடி அரசு:

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக உலகை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறது எனவும் ஆனால், நமது அண்டை நாடுகளில் சில பயங்கரவாதத்தை ஆதரித்து, அதற்கு ஆதரவாக உரக்கப் பேசி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.  

ஆனால் பிரதமர் மோடி அவ்வாறு செய்யவில்லை எனவும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அமைப்பை (பிஎஃப்ஐ) தடை செய்ய மோடி அரசு சிறிதும் தயங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

தொடங்கிய அமைதிக் காலம்:

2014-ல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகே வடகிழக்கு மாநிலங்களில் அமைதி காலம் தொடங்கியுள்ளது எனவும் வன்முறை 80% குறைந்துள்ளதுடன் பொதுமக்கள் இறப்பு 89% குறைந்துள்ளதாகவும் தாக்கூர் கூறியுள்ளார்.  2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 6000 போராளிகள் சரணடைந்துள்ளனர் எனவும் இதன் காரணமாக இடதுசாரி தீவிரவாதம் 265% குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற கொள்கையை மோடி அரசு கடைப்பிடிப்பதல் இந்தியாவில் பயங்கரவாதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் அனுராக் தாக்கூர்.

-நப்பசலையார்