இந்தியா முழுவதும் ராகுல் வேகமாக நடக்க… காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வேகமாக வெளியேறுகின்றனர். கோவாவில் காங்கிரஸ் கப்பல் கரை தட்டி நிற்கிறது.
மாநில கட்சியாக காங்.,:
சுதந்திர இந்தியாவில், தொடக்கத்தில், தமிழ்நாடு, கேரளாவைத் தவிர பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைத்திருந்தது. இந்த வரலாறும் நாம் அனைவரும் அறிந்ததே. 1947ல் இருந்த காங்கிரசி 2022ல் மொத்தமாக தேய்ந்து, ராஜஸ்தான், சத்தீஸ்கர் என்ற இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. இது, தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் ஒரு மாநில கட்சி அந்தஸ்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ராகுலின் நடை பயணம்:
காங்கிரஸ் கட்சியின் இந்த பலவீனத்தை உணர்ந்த ராகுல் காந்தி, இந்தியா முழுமைக்கும் வீதி வீதியாக சென்று கட்சியைப் பலப்படுத்த போராடிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் நிறைவடைந்த ராகுலின் நடைபயணம் கேரளாவில் நீண்டு கொண்டு இருக்கிறது. அந்த அரபிக் கடலோர கரைகளில் ஒரு படகு போல் ராகுல் சென்று கொண்டிருக்க, அவரது கட்சி அதே அரபிக் கடலின் ஒரு குட்டி பகுதியில் கரை தட்டி நிற்கிறது.
145 DAYS MORE TO GO:
ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில் அவர் அணிந்த டீ-ஷர்ட்டை வைத்து பாஜக கடுமையாக விமர்சித்தது. இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், பாஜக ஆட்சி இந்தியாவில் இருந்து அகற்றப்பட இன்னும் 145 நாட்கள் மட்டுமே இருக்கிறது என ஒரு படத்தை பதிவிட, தேசிய அளவில் அந்த புகைப்படம் பேசு பொருளானது.
மேலும் தெரிந்துகொள்க: இன்னும் 145 நாட்களே உள்ளன!!!பாஜகவுக்கு காலக்கெடு வைத்த ராகுல்!!!
காங்கிரஸ் ஷாக்:
145 நாட்கள் மட்டுமே இருக்கிறது பாஜக ஆட்சி முடிய என்று காங்கிரஸ் கட்சி போட்ட பதிவிற்கு அதே எண் கணக்கைக் காட்டி பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது. அதாவது, கோவா மாநிலத்தில், உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 11 பேரில், 8 பேரை பாஜக தனது கூடாரத்திற்கு இழுத்துள்ளது.
கோவாவில் ஒன்றிணைப்பு:
கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளதை ராகுல் காந்தியின் நடை பயணத்துடன் ஒப்பிட்டு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவன் கிண்டல் அடித்துள்ளார். இந்தியா ஒற்றுமை நடை பயணம் என்று பெயரிட்டு தான் ராகுல் காந்தி நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதனைக் குறிப்பிட்டு, உண்மையிலேயே ஒற்றுமை என்பது கோவாவில் தான் நடக்கிறது என்று சாவன் பேசியுள்ளார்.