நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஜிடிபி சரிவு உள்ளிட்டைவையை வைத்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் ஜிடிபி நடப்பு நிதியாண்டில் - 7புள்ளி 3 சதவீதமாக சரிந்துள்ளதாக நேற்று அதிகாரிபூர்வமாக தெரியவந்தது. மேலும் கொரோனா பாதிப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
இதை இரண்டையும் வைத்து காங்ரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை டுவிட்டரில் விமர்சித்துள்ளார். அதில் அவமானத்தின் சின்னம் பிரதமர் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் ஜிடிபி குறைவு மற்றும் நாட்டில் வேலையில்லா பாதிப்பு இரண்டையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.