இந்தியா

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்...  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி...

புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் நிலையில், அதற்கான அறிவிப்பாணையை திரும்பப்பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி நகராட்சியில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையில் கொண்ட வார்டுகளை ஒதுக்காமல் குறைந்த எண்ணிக்கை கொண்ட வார்டுகளை ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், விதிகளின்படி ஆதிதிராவிடர்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த மனு மீதான விசாரணையின்போது, குளறுபடிகள் நீக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப்பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம். ஐந்து நாட்களில் புதிய அறிவிப்பாணையை புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட்டுள்ளது.