அரசாங்கம் இதுவரை சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மீட்டுள்ளதாகவும், 4,600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அகற்றப்பட்ட ஊழல்:
2014 முதல் 2022 வரையிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் 4.5 லட்சம் கோடி ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் ஏராளமான ஊழல்கள் அகற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். ஏலம் மூலம் பெறப்பட்ட பணமெல்லாம் அரசுக்கு வந்துகொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார் வைஷ்ணவ்.
ரூ.4,300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 1.75 லட்சம் கம்பெனிகளின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி பாதை:
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து மத்திய அமைச்சர் கூறுகையில், நாடு குறுக்குவழி அரசியலை நோக்கி செல்லாமல் நல்லாட்சியை நோக்கி செல்ல வேண்டும் என்பதில் பிரதமருக்கு தெளிவான பார்வை உள்ளது என்று கூறியுள்ளார். நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும் சென்றடையும் வகையில் நல்லாட்சிக்கான டிஜிட்டல் கட்டமைப்பை பிரதமர் தயாரித்துள்ளார் எனவும் முதல் டிஜிட்டல் பரிமாணம், 45 கோடி ஜன்தன் கணக்குகள் எனவும் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இந்தி தெரியாதது ஒரு குத்தமா...இப்படியா அசிங்கப்படுத்துவீங்க...வருந்திய காங்கிரஸ் எம்.பி!!!