இந்தியா

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா விசாரணையும் கைதும் ஆலோசனையும்!!!

Malaimurasu Seithigal TV

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 106 பேரை கைது செய்துள்ளனர்.  

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது புகார்:

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தது, பயிற்சி வழங்கியது மற்றும் மக்களை பயங்கரவாத செயலுக்கு தூண்டியது என, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அண்மையில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக அந்த அமைப்பு மீது புகார் கூறப்பட்டதை அடுத்து, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சோதனை நடத்தப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்.

அமித் ஷா தலைமையிலான கூட்டம்:

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாஅமைப்புக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை சோதனைகள் நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

விவாதம்:

கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வளாகத்தில் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலந்து கொண்டவர்கள்:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர் ஜெனரல் தினகர் குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஆய்வு:

பயங்கரவாதத்திற்கு சம்பந்தமான சந்தேக நபர்கள் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தொழிலாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஷா ஆலோசனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


\