ஒடிசா மாநிலத்தில் சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் வனக்காவலரைச் சுட்டுக் கொன்ற வழக்கில் இருவரைக் கைது செய்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிமில்பால் புலிகள் காப்பகத்தில் வேட்டையாடுபவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், புலிகள் காப்பகத்திற்கு வேட்டையாடும் நோக்கில் வந்த வேட்டையாடுபவர்களை தடுத்து நிறுத்திய வனக்காவலர் ஒருவரை அந்த கும்பல் ஒன்று சுட்டுக் கொன்றுள்ளது.
இந்த வழக்கை வனத்துறை விசாரித்து வந்த நிலையில், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரைக் கைது செய்துள்ளதாகவும் மாநில முதன்மை வனவிலங்கு காப்பாளர் சுஷில் குமார் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: குப்பை தொட்டியில் குழந்தையை மீட்ட தூய்மை பணியாளர்கள்....!!